ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் செந்நண்டுகள் புறப்பாடு: முக்கிய சாலைகள் அடைப்பு

கான்பரா: ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் லட்சக்கணக்கான செந் நண்டுகள் இனப்பெருக்கத்திற்கான ஆண்டு இறுதி புலம்பெயர்தலை தொடங்கியுள்ளன. செந்நிறத்தில் காட்சியளிக்கும் நண்டுகள் சாலைகளையும், பாலங்களையும் கடந்து கடலை நோக்கி ஊர்ந்து செல்ல ஆரம்பித்துள்ளன. இதனால் இவற்றின் பாதுகாப்பு கருதி கிறிஸ்துமஸ் தீவில் குறிப்பிட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. அந்த சாலைகளில் பாதசாரிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. சாலைகளில் செந் நண்டுகளின் ஆண்டிறுதி புலம்பெயர்தலுக்கான பயணம் காண்போரை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஸ்துமஸ் தீவின் மத்தியில் இருந்து கடலை நோக்கி ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் லட்சக்கணக்கான செந் நண்டுகள் புறப்படுகின்றன. அங்கு இணை சேர்ந்த பின்பு ஆண் நண்டுகள் மட்டும் தீவுக்கு மீண்டும் திரும்பி விடுகின்றன. கடலில் தலா 1 லட்சம் முட்டைகளை இடும் பெண் நண்டுகள் 2 வாரங்கள் கழித்து குஞ்சுகளை பொறித்த பின்பு இரண்டும் அங்கிருந்து மீண்டும் கிறிஸ்துமஸ் தீவின் மத்திய பகுதியை அடையும்.

Related Stories: