×

உக்ரைனில் போர் நிறுத்தம் தேவை; எரிபொருள் விநியோகத்திற்கு கட்டுப்பாடு கூடாது: பிரதமர் மோடி உரை

பாலி: எரிபொருள் விநியோகத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதை ஜி20 நாடுகள் ஊக்குவிக்கக்கூடாது என  பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்தோனேசியா நாட்டின் தலைநகர் பாலியில் 17வது ஜி-20 உச்சி மாநாடு இன்றும் நாளையும் நடக்கிறது. இதில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டில் பங்கேற்க பாலி நகருக்கு சென்ற பிரதமர் மோடி ஜி-20 மாநாட்டு நடைபெறும் அபூர்வா கெம்பிஸ்னிகி ஓட்டலுக்கு இன்று பிரதமர் மோடி வருகை தந்தார். அவரை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ வரவேற்றார்.

பின்னர் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி; இந்தியாவின் ஆற்றல், பாதுகாப்பு உலக வளர்ச்சிக்கு முக்கியமானது. இந்தியா உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரம். ஆற்றல் வழங்கலில் எந்த தடையும் இல்லாமல், ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் ஏழை குடிமக்களுக்கான சவால் மிகவும் கடுமையானது. அன்றாட வாழ்க்கை அவர்களுக்கு ஒரு போராட்டமாக இருக்கிறது. கொரோனா பேரிடருக்கு பின் புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் பொறுப்பு நம் தோள்களில் உள்ளது. உலக வளர்ச்சிக்கும் இந்தியாவின் எரிபொருள் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும்.

எரிபொருள் விநியோகத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதை ஜி20 நாடுகள் ஊக்குவிக்கக்கூடாது. 2030ம் ஆண்டுக்குள் மின்சாரத்தில் பாதிக்கு மேல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் உற்பத்தி செய்யப்படும். எரிபொருள், எரிசக்திகளுக்கு தேவையான நிதி, தொழில்நுட்பங்களை வழங்க ஜி20 உச்சி மாநாடு நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம். கொரோனா பரவலுக்கு பிறகான உலகை சிறப்பானதாக கட்டமைக்கும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. அமைதி, நல்லிணக்கம், தேச பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தீர்மானங்கள் இப்போது மிகவும் முக்கியமானது. புத்தர் - காந்தி வாழ்ந்த புனித பூமியில் அமைதியை நிலைநாட்ட ஜி20 உச்சிமாநாட்டில் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.

இன்றைய உரத்தட்டுப்பாடு என்பது நாளைய உணவு பற்றாக்குறைக்கு காரணமாக இருக்கும். உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து உரத்தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண ஒன்றிணைய வேண்டும். உரம்-உணவு தானிய வினியோகங்கள் மற்றும் பாதுகாப்புக்காக பரஸ்பர ஒப்பந்தம் செய்ய வேண்டும். இந்தியாவில் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து தினை, தானியங்களை பயிரிட ஊக்குவித்து வருகிறோம். தினை வகைகள் என்பது உலகளாவிய ஊட்டசத்து குறைபாடு, பசியை தீர்க்கும்.

அடுத்த ஆண்டு நாம் அனைவரும் சர்வதேச தினை ஆண்டை உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும். உக்ரைன் போர் நிறுத்தத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் வழியை கண்டுபிடிக்க வேண்டும். கடந்த நூற்றாண்டில் 2ம் உலகப்போர் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியதால் இது மிகவும் முக்கியம் இவ்வாறு கூறினார்.


Tags : Ukraine ,PM Modi , A ceasefire is needed in Ukraine; No restriction on fuel supply: PM Modi's speech
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!