×

வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை.! வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது. தமிழகம், புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு கடலோர பகுதிகளில் வரும் 19ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு எனவும், நவம்பர் 19ம் தேதி முதல் மழை படிப்படியாக தீவிரமடைய வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Sea of Banga ,Meteorological Research Center , New depression forming over Bay of Bengal tomorrow: Moderate rain for next 4 days.! Meteorological Center information
× RELATED வங்கக் கடலில் செப்.30ம் தேதி புதிதாக...