மருத்துவர்களின் கவனக்குறைவே பிரியா உயிரிழப்பிற்கு காரணம்: சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: ரத்த நாளங்களில் ஏற்பட்ட பாதிப்பால் ரத்தம் ஓட்டம் நின்றுள்ளது. மூட்டு சவ்வு அறுவை சிகிச்சைக்காக போடப்பட்ட கட்டு காரணமாக வலி ஏற்பட்டுள்ளது என அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம்: ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். மருத்துவர்களின் கவனக்குறைவே பிரியா உயிரிழப்பிற்கு காரணம்: அவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: