தாய்மாமாவின் 100வது பிறந்தநாள் நேரில் ஆசி பெற்றார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கலைஞரின் மைத்துனரும், அவரது மனைவி தயாளு அம்மாளின் சகோதரருமான தட்சிணாமூர்த்தி (100), திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பூந்தோட்டம் அருகே கோயில் திருமாளம் கிராமத்தில் வசித்து வருகிறார். திமுகவின் மூத்த முன்னோடியான இவர், 2 முறை கோயில் திருமாளம் ஊராட்சி மன்ற தலைவராகவும், திருவாரூர் மாவட்ட ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்தின் தலைவராகவும் பதவி வகித்தவர்.

தட்சிணாமூர்த்திக்கு 99 வயது நிறைவடைந்து, 100வது பிறந்தநாள் நேற்றுமுன்தினம் கொண்டாடப்பட்டது. தனது தாய்மாமாவான அவருக்கு, தொலைபேசி மூலமும், டுவிட்டர் மூலமும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். மழை பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று மதியம் கோயில் திருமாளம் கிராமத்தில் உள்ள தாய்மாமா தட்சிணாமூர்த்தியின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து 100வது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, ஆசிர்வாதம் பெற்றார். மாமனார் உருவ படத்துக்கு மாலை திருவெண்காட்டில் உள்ள மாமனார்  ஜெயராமன் வீட்டுக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு மாமனார் ஜெயராமன் உருவ படத்திற்கு மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Related Stories: