மதச்சார்பின்மை என்ற நேர்கோட்டில் திமுகவுடன் பயணிக்கிறோம்: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: மதச்சார்பின்மை என்ற நேர்கோட்டில் திமுகவுடன் பயணிக்கிறோம் என்று கிண்டி கத்திப்பாராவில் உள்ள ஜவகர்லால் நேரு சிலை மற்றும் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை ெசலுத்திய பிறகு காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக, கிண்டி கத்திபாராவில் அவருடைய சிலையின் கீழ் அமைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் தூவி, மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14ம்தேதியை, நாம் அனைவரும் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். மேலும், ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் விடுதலை செய்யப்பட்டு, கொலைக்காரர்களை வெளியே உலாவ விடுவது தவறு. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இஸ்லாமியர்கள் சந்தேகத்தின்பேரில் சிறையில் இருக்கிறார்கள் அவர்களை விடுதலை செய்யாதது ஏன். இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி, ராஜிவ்காந்தி கொலையாளிகளுக்கு ஒரு நீதியா.

ராஜிவ்காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை நாட்டிற்கு நல்லது அல்ல. கூட்டணி வேறு கொள்கை வேறு காங்கிரஸ் - திமுக இடையே கொள்கையில் கருத்து வேறுபாடு இருக்கும். ஆனால் மதசார்பின்மை என்ற நேர்கோட்டில் பயணிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்வின்போது, கோபண்ணா, தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்  நாஞ்சில் பிரசாத் டில்லிபாபு, எம்எல்ஏ அசன் மௌலானா, மாவட்ட நிர்வாகிகள்  ஆர்.பகத்சிங், தளபதி பாஸ்கர், கடல் தமிழ்வாணன், எம்.ஆர்.வாசு,  கோகுலகிருஷ்ணன், தனசேகரன் ஆதன் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: