மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலுக்கு காணிக்கையாக வந்த 39 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு: அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை:  சென்னை அடுத்த மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 39 கிலோ 704 கிராம் எடையுள்ள தங்கத்தை தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் நிகழ்ச்சி நேற்று கோயில் வளாகத்தில் நடைபெற்றது. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜு தலைமை வகித்தார். அமைச்சர்கள் சேகர் பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது, காணிக்கையாக வந்த தங்கத்தை, பாரத ஸ்டேட் வங்கியின் அம்பத்தூர் மண்டல மேலாளர் ராஜலட்சுமியிடம் வழங்கினர். இதில் பெரும்புதூர் சட்ட மன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், கூடுதல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர் செந்தில் வேலவன், கோயில் பரம்பரை தர்மகர்த்தா சீனிவாசன், செயல் அலுவலர் கவெனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: