குலாம் நபி கட்சி பெயர் மாற்றம்

ஜம்மு: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரான குலாம் நபி ஆசாத் சமீபத்தில் புதிய கட்சியை தொடங்கினார். அதற்கு ஜனநாயக ஆசாத் கட்சி என்று பெயரிடப்பட்டது. இந்த நிலையில், ஜனநாயக ஆசாத் கட்சி என்ற பெயரை முற்போக்கு ஆசாத் கட்சி என குலாம் நபி ஆசாத் மாற்றி உள்ளார். இதுதொடர்பாக பெயர் மாற்றம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் அவர் விண்ணப்பித்துள்ளார். இதற்கான அறிவிப்பை அவர் நேற்று வெளியிட்டார்.

Related Stories: