மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான காப்பீடு தேதியை 30ம் தேதி வரை நீடிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

சென்னை:மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கொளப்பாக்கம் கணேஷ் நகர் பகுதியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருவள்ளூர் நகர் மணப்பாக்கத்தில் சுமார் 500 வீடுகள் கன மழையால் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். இப்போது மழை கொஞ்சமாகதான் பெய்துள்ளது. வடகிழக்கு பருவ மழை துவங்கி 10 நாட்கள்தான் ஆகியுள்ளது. கனமழை பெய்யவில்லை. அந்த அளவுக்கு மழை இருந்தால் சென்னை  மக்கள் கடுமையாக பாதிக்கபடுவார்கள்.

அதிமுக ஆட்சியில் கடந்த 10 வருடத்தில் எந்த பணியும் செய்யவில்லை என்று  அமைச்சர்கள் சொல்வதாக கேட்கிறீர்கள். அமைச்சர்கள் திட்டமிட்டு பொய் பேசுகிறார்கள். நான் சொன்ன நிதியை யாரும் மறைக்க முடியாது. அதிமுக ஆட்சியில் டெண்டர் வைத்தோம். அதனை ரத்து செய்து விட்டார்கள். அதில்தான் சிங்கார சென்னை, 2-0  என்று அறிவித்துள்ளார்கள். திமுக அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று, பாதிப்புகளை கணக்கிட்டு, காப்பீட்டு திட்டத்தின் மூலமாக அவர்களுக்கு சேரவேண்டிய பெற்று தருவதோடு, மாநில அரசும் ஒரு  தொகையை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். காப்பீடு 15ம் தேதி (இன்றோடு) நிறைவு பெறுவதாக தெரிவித்துள்ளார்கள். அதனை வருகிற 30ம் தேதி வரை  நீடிக்க வேண்டும் என்றார்.

Related Stories: