கனடாவில் குடியுரிமை இருந்தால் ராணுவத்தில் வேலை

டொரன்டோ: கனடாவில் இந்தியா, இலங்கை, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அந்நாட்டின் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களாக உள்ளனர். இந்நிலையில், நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் கனடா ராணுவத்தில் சேரலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கனடா ராணுவத்தில் காலியாக இருக்கும் ஆயிரக்கணக்கான இடங்களை நிரப்ப போதிய ஆட்கள் இல்லை என்பதை தொடர்ந்து இந்தாண்டு இறுதிக்குள் 5,900 வீரர்களை சேர்க்க ராணுவம் முடிவெடுத்து இருப்பதையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி, ராணுவத்தில் சேர 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 16 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களது பெற்றோர் சம்மதம் வேண்டும். 10 அல்லது 12ம் வகுப்பு கல்வி தகுதி இருந்தால் போதுமானது. இந்த விதிகள் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கனடா வாழ் இந்தியர்கள் அதிக பலன் அடைவர்.

Related Stories: