வேலைக்கு சேர்ந்த முதல்நாளே மின்சாரம் பாய்ந்து ஓட்டல் ஊழியர் பலி

சென்னை: சென்னை தி.நகர் நாயர் சாலையில் உள்ள  தனியார் ஓட்டலில் பாபு (27) என்பவர் சர்வராக நேற்று முன்தினம் வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில், ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு ஷட்டரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. அதை கவனிக்காத பாபு அதில் கை வைத்துள்ளார். உடனே உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், பாபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த வாலிபர் பாபு, அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கீழ கொளத்தூரைச் சேர்ந்தவர். நேற்று முன்தினம் தான் வேலைக்கு சேர்ந்துள்ளார். வேலைக்கு சேர்ந்த முதல்நாளிலேயே உயிரிழந்தது குடும்பத்தினர் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாண்டிபஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: