திருவொற்றியூர் பகுதியில் 2 நாள் வாக்காளர் குறைதீர் முகாம்: ஏராளமான மக்கள் பயன்

திருவொற்றியூர்: தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் குறை தீர்ப்பு முகாம் கடந்த 2 தினங்களாக நடைபெற்றது. இதில், வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல், நீக்கல் விலாசம் சரிபார்த்தல் போன்றவைகளுக்காக ஏராளமான வாக்காளர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் பங்கேற்று தங்கள் குறைகளை சரிசெய்து பயன் பெற்றனர். இவ்வாறு, மாதவரம் தொகுதிக்குட்பட்ட மாத்தூர் எம்.எம்.டி.ஏ, திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட பாடசாலை தெரு, காலடிப்பேட்டை, பெரியார் நகர் போன்ற இடங்களில் அரசு பள்ளிகளில் நடைபெற்ற வாக்காளர் குறை தீர்ப்பு முகாமில், சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ பங்கேற்று பணிகள் குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்தார். அப்போது, மாவட்ட அவைத் தலைவர் குறிஞ்சி எஸ்.கணேசன், மண்டலகுழு தலைவர்கள் தி.மு.தனியரசு, ஏ.வி.ஆறுமுகம், பகுதி செயலாளர்கள் புழல் நாராயணன் வை.மா.அருள்தாசன், கவுன்சிலர் காசிநாதன், திமுக நிர்வாகிகள் தாமரைச்செல்வன், மஞ்சம்பாக்கம்பாபு, கேபிள் டிவி.ராஜா, மணிகண்டன், டி.எஸ்.பிரசாத் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: