போரூர் கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்

சென்னை: போரூர் கோட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்களுக்கு இன்று மின்நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடைபெறும் என மின்சாரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: போரூர் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மின்துறை தொடர்பான புகார் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று காலை 11 மணியளவில்  போரூர்,  எஸ்.ஆர்.எம்.சி. துணை மின்நிலைய வளாகத்தின் முதல்மாடியில் செயற்பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: