சென்னை கொருக்குப்பேட்டை பெரியநாயகி அம்மன் திருக்கோயிலை புனரமைக்க இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் ரூ.28.10 லட்சம் நிதி ஒதுக்கீடு

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டை- எண்ணூர் நெடுஞ்சாலையில் பழமையான அருள்மிகு  பெரிய நாயகி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலிலை  இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் புனரமைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு, பணிகள் தொடங்க இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக நேற்று இரவு இத்திருக்கோயில் மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்நிலையில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இன்று இத்திருக்கோவிலுக்கு நேரில் சென்று மண்டபத்தின் இடிந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்த பின் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் கொருக்குப்பேட்டை பெரியநாயகி அம்மன் திருக்கோயிலை புனரமைக்க  ரூ.28.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலின் திருப்பணிகளை தொடங்குவதற்கான பாலாலயம் வருகின்ற 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories: