ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் நிறுவப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஆளுநர்  சட்டமன்றப் பேரவையில் 07.01.2022 அன்று ஆற்றிய பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டார். மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் மட்டுமின்றி பழங்குடியினர் நலப்பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் நிறுவப்படும், அதற்கு தேவையான உட்கட்டமைப்புக்கு, கூடுதலாக நிதி ஒதுக்கித் தரப்படும்.

மேற்படி அறிவிப்பினை நிறைவேற்றும் நிலையில் 87 ஆதிதிராவிடர் நல உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மற்றும் 4  அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கு அறிவுத்திறன் வகுப்பறை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட ரூ.3,13,95,000-மும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ.2,09,000-மும் ஆக மொத்தம் ரூ.3,16,04,000  நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசாணையின் மூலம் 9790 மாணவ, மாணவியர்கள் பயனடைகின்றனர். தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படும்.

Related Stories: