×

ஜப்பானில் இன்று மதியம் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு

டோக்கியோ: ஜப்பானில் இன்று மதியம் 6.1 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் இன்று மதியம்  டோக்கியோ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் நேரப்படி மாலை 5.09 மணியளவில், இந்திய நேரப்படி மதியம் 1.39 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மத்திய மீ மாகாணத்தில் சுமார் 350 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டோக்கியோ உள்ளிட்ட பிறநகரங்களிலும் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார். டோக்கியோவுக்கு வடக்கே உள்ள புகுஷிமா மற்றும் இபராக்கி மாகாணங்கள், நில நடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள போதிலும், கடுமையான நில அதிர்வை உணர்ந்துள்ளன.

நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து ஷிங்கன்சென் புல்லட் ரெயில்கள் மற்றும் டோக்கியோ மெட்ரோ சேவைகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.


Tags : Japan , A sudden earthquake struck Japan this afternoon: 6.1 on the Richter scale
× RELATED ஜப்பான், இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!