ஏடிபி பைனல்ஸ் தொடர்: முதல் போட்டியில் நடால் அதிர்ச்சி தோல்வி

துரின்: ஆண்டின் இறுதியில் ஏ.டி.பி. பைனல்ஸ் எனப்படும் ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஏ.டி.பி. பைனல்ஸ் தொடர் இத்தாலியின் துரின் நகரில் நேற்று தொடங்கியது. இதில் தரவரிசையில் டாப் 8 இடம் வகிக்கும் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ரவுண்ட்ராபின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

அதன்படி நேற்று நடந்த முதல் போட்டியில், கிரீன் பிரிவில், நார்வேயின் காஸ்பர்ரூட், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் மோதினர். இதில் 7-6, 6-4 என காஸ்பர் ரூட் வென்றார். தொடர்ந்து இன்று அதிகாலை நடந்த போட்டியில் அதே பிரிவில், முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் பலப்பரீட்சை நடத்தினர். இதில் டெய்லர் 7(7)-6(3), 6-1 என்ற செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார்.

Related Stories: