×

இபிஎஸ் மவுனம்..ஓபிஎஸ் ஆதரவு!: 10% இடஒதுக்கீடு வழக்கில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.. ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை..!!

மதுரை: 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். 10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பை வரவேற்பதாக எடப்பாடி தரப்பில் ஜெயக்குமார் கூறிய நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மாற்று கருத்து தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் இடம் பிரதமர் பேசவே இல்லை என உதயகுமார் கூறிய நிலையில், மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியையும், ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசியது திருப்திகரமாக இருந்தது. எங்களது ஆதரவாளர்கள் யாரும் மன வருத்தத்தில் இல்லை; மகிழ்ச்சியாக உள்ளனர். 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசு சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும் என கூறினார். உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது.

பழனிசாமி மவுனம், ஜெயக்குமார் ஆதரவு, ஓபிஎஸ் எதிர்ப்பு:

10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக அதிமுக குரல் கொடுக்க வேண்டும் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறிய நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான பழனிசாமி கருத்து கூறாமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணித்தது பற்றி விமர்சனம் எழுந்தது. 69 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நிலைப்பாட்டுக்கு எதிராக அதிமுக நடப்பதாக விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : EPS ,OPS ,O. Panneerselvam , 10% Reservation, Government Appeal, O. Panneerselvam
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்