×

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக; சென்னையிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்!

போரூர்: சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதி கருதி சென்னையில் இருந்து பம்பைக்கு வருகிற 17-ம் தேதி முதல் விரைவு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்தை காண தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் செல்வது வழக்கம். அவர்களின் வசதி கருதி சென்னையில் இருந்து பம்பைக்கு வருகிற 17-ம் தேதி முதல் விரைவு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னையில் இருந்து பம்பைக்கு பிற்பகல் 3.30 மணி மற்றும் 4 மணி என 2 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில், பஸ் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.1090, சிறியவர்களுக்கு ரூ. 545 கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த அதிநவீன மிதவை சொகுசு பஸ் சேவை ஜனவரி 18-ம் தேதி வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பயணிகள் www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதே போல், சென்னையில் இருந்து குமுளிக்கு மாலை 5.30 மணிக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரியவர்களுக்கு ரூ. 575, சிறியவர்களுக்கு ரூ. 288 கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.


Tags : saparimalai ,chennai , For the convenience of devotees going to Sabarimala; Special buses run from Chennai!
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...