திருப்பத்தூர் அருகே கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கி சேதம்-விவசாயிகள் வேதனை

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அருகே பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் சில தினங்களாக பெய்து வரும் கனமழை மற்றும் லேசான மலையின் காரணமாக பல்வேறு குளம் குட்டைகள் ஏரிகள் என நிரம்பி வருகின்றன.

இந்நிலையில் திருப்பத்தூர் அடுத்த சின்னக்குனிச்சி கிராமத்தை சேர்ந்தவர்கள் சின்னராஜ், எத்திராஜ், மாணிக்கம், பெரியசாமி. விவசாயிகளான இவர்களுக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் அளவில் நெல் சாகுபடி செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கி சாய்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.  விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்  சங்கத்தில் பயிர் கடன் பெற்று  விவசாயம் செய்து வந்ததாகவும் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் முற்றிலும் மழைநீரில் மூழ்கியும் சாய்ந்தும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.  இதனால் விவசாயிகள் பெறும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.  எனவே, தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: