இத்தாலி டியூரின் ATP டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ரஃபேல் நடால் அதிர்ச்சி தோல்வி..!

இத்தாலி: டென்னிஸ் உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான ரஃபேல் நடால் இத்தாலி டியூரின் ATP டென்னிஸ் இறுதி போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இத்தாலி டியூரின் ATP டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிரிட்ஸ் எதிர்கொண்டு விளையாடினார். ஆரம்பத்தில் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய ரஃபேல் நடால் முதல் செட்டின் இறுதியில் சற்று தடுமாற தொடங்கினார்.

இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அமெரிக்கா வீரர் டெய்லர் ஃபிரிட்ஸ் அதிரடியாக மோதினார். இதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய டெய்லர் ஃபிரிட்ஸ் ரஃபேல் நடாலை வீழ்த்தினார். 7-க்கு 6 , 6-க்கு 1 என்ற நேர்செட்களில் அமெரிக்க வீரர் டெய்லர் வெற்றியை தன் வசமாக்கினார். டியூரின் ATP போட்டியில் பட்டம் வென்ற டெய்லர் ஃபிரிட்ஸுக்கு வெற்றி கோப்பையையும், ரொக்க பரிசும் வழங்கப்பட்டன.        

Related Stories: