திருப்பதியில் ஜெகன் அண்ணா பொன்விழா கலாச்சார கொண்டாட்ட போஸ்டர்-அமைச்சர் ரோஜா வெளியிட்டார்

திருப்பதி :  திருப்பதியில் ஜெகன் அண்ணா பொன்விழா கலாச்சார கொண்டாட்டங்கள் தொடர்பான போஸ்டரை அமைச்சர் ரோஜா நேற்று வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், திருப்பதி, குண்டூர், ராஜமுந்திரி, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் மண்டல அளவிலான போட்டிகளும், டிச. 19, 20ல் விஜயவாடா நந்து தும்மலப்பள்ளி கலாக்ஷேத்ராவில், மாநில அளவிலான போட்டிகளும் நடக்கின்றன. திருப்பதி மண்டலத்தைப் பொறுத்தவரை நெல்லை, திருப்பதி, சித்தூர், அன்னமய்யா, ஒய்எஸ்ஆர் கடப்பா, சத்யசாய், அனந்தபுரம், நந்தியாலா, கர்னூல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கலைஞர்களுக்கு நவம்பர் 19, 20, 21 ஆகிய தேதிகளில் மஹதி கலாக்ஷேத்ராவில் நடைபெறும் என்று கூறினார்.

Related Stories: