×

தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் தொடரும் விபத்து-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டம் சென்னையில் இருந்து விக்கிரவாண்டி வழியே கும்பகோணம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிவதால் விபத்துக்கள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும்  ஏராளமான இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், கனரக வாகனங்கள் தினமும் கடந்து செல்கின்றது. அவ்வாறு கடந்து செல்லும் வாகனங்கள் திடீரென பகல் மற்றும் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே மேய்ச்சலுக்காக கால்நடைகள் வரும்போது எதிர்பாராதவிதமாக விபத்துகள் ஏற்படுகிறது.

இதனால் சில நேரங்களில் மனித உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. தொடர்ச்சியாக விக்கிரவாண்டியிலிருந்து கும்பகோணம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கப்பியாம்புலியூர் அருகே கால்நடைகள் சுற்றித்திரிகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தினந்தோறும் பெரும் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கால்நடைகளால் உயிரிழப்புகள் அதிகம் நேரிடுவதாக புகார் தெரிவித்துள்ளனர். எனவே சுற்றித்திரியும் கால்நடைகளை மாவட்ட நிர்வாகம் பிடித்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : National Highway , Vikravandi : Villupuram District Chennai to Kumbakonam via Vikravandi National Highway Cattle
× RELATED சென்னை – பெங்களூரு தேசிய...