ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான 4 பேரும் இலங்கைக்கு அனுப்பப்படுவர்: திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டி

திருச்சி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 4 பேர் சொந்த நாடான இலங்கைக்கு அனுப்பப்படுவர் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேருக்கும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. முகாமில் 4 பேரும் உண்ணாவிரதம் இருப்பதாக பரவும் தகவல் உண்மையில்லை. முகாமில் நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதி கேட்டார்கள். அது கொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: