மழையால் குடிசை முழுவதுமாக இடிந்திருந்தால் ரூ.5,000 நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவிப்பு

சென்னை:மழையால் குடிசை முழுவதுமாக இடிந்திருந்தால் ரூ.5,000 மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4,800 நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். கடலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 99 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட 52,751 பேருக்கு 99 முகாம்கள் மூலம் உணவு வழங்கப்படுகிறது அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories: