டெல்லி மாநில அதிமுக அலுவலக செயலாளர் சந்திரசேகரன் உயிரிழப்பு : எடப்பாடி இரங்கல்

சென்னை: அதிமுக  இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: அதிமுக புதுடெல்லி மாநில அலுவலக செயலாளர் சந்திரசேகரன் மாரடைப்பால் மரணமடைந்த செய்தி கேட்டு . வேதனை அடைந்தேன்.  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புதுடெல்லி செல்லும்போதெல்லாம் அவர் கூறும் பணியினை விசுவாசத்தோடு திறம்பட செய்தவர். மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த சந்திரசேகரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் துயரத்தைத் தாங்கிக்கொள்ளகூடிய சக்தியையும் தைரியத்தையும் அளிக்க வேண்டும். அன்னாரது ஆன்மா இறைவன் திரவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: