கனமழையில் மூழ்கிய சுரங்கப்பாதை ஒருமணி நேரத்தில் நீர் வெளியேற்றம்

தாம்பரம்: தாம்பரம் சுற்றுவட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதில் தாம்பரம் பகுதியில் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளை இணைக்கும் சுரங்கபாதை முழுவதும் நீர் நிரம்பியது. இதனால் மேற்கு மற்றும் கிழக்கு தாம்பரத்திற்கு செல்லும் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் 2 மோட்டார் பம்புகள் மூலம் மழை நீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்குள் சுரங்கப்பாதையில் தேங்கி இருந்த மழை நீர் அனைத்தையும் முழுமையாக வெளியேற்றினர். இதனை தொடர்ந்து வழக்கம் போல வாகனங்கள் செல்ல தொடங்கியது.

Related Stories: