செங்கோட்டையன் பேச்சால் சலசலப்பு அதிமுகவால் தனித்து நிற்க முடியும்

சத்தியமங்கலம்: அதிமுகவால் தனித்து நிற்க முடியும் என்ற அதிமுக முன்னாள் அமைச்சரின் பேச்சால் கூட்டணியில் பரபரப்பு நிலவுகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அதிமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி தலைமை வகித்தார்.

முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில்:

என்னுடைய அரசியல் வரலாறு 50 ஆண்டு காலம்.  தமிழ்நாட்டில் எந்த தேர்தலாக இருந்தாலும் தனித்துப்போட்டியிடக் கூடிய ஒரே கட்சி அதிமுகதான். அதிமுகவால் தனித்து நிற்க முடியும். நம்மைவிட்டு சென்றவர்களை பற்றி கவலை இல்லை. நம்மை யாராலும் வீழ்த்த முடியாது.  இவ்வாறு அவர் பேசினார்.

அதிமுக கூட்டணியில் பாஜ உள்ளிட்ட கட்சிகள் உள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவால் தனித்து நிற்க முடியும் என பேசியது பாஜ-அதிமுக கூட்டணியில் விரிசலா? என்ற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி கட்சியினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: