×

குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தடை

தென்காசி: தென்காசி, குற்றாலம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசானது முதல் மிதமான அளவில் மட்டுமே மழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி நேற்று மதியம் முதல் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. விடுமுறை தினமான நேற்று வெளியூர்களிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Tags : Koorala , Koorala waterfall, bathing prohibited
× RELATED பழைய குற்றால அருவியில் குளிக்க மீண்டும் தடை