கேரள மாணவியின் படிப்புக்கு உதவிய அல்லு அர்ஜூனுக்கு கலெக்டர் பாராட்டு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்ட கலெக்டர் கிருஷ்ண தேஜாவிடம், பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஒருவர், தனக்கு நர்சிங் படிப்பில் ஆர்வம் இருப்பதாகவும், படிப்பதற்கு வசதி இல்லை என்றும் தெரிவித்தார். மருத்துவம் படிக்கும் அளவுக்கு மதிப்பெண்கள் இருந்தும் நர்சிங் படிக்க விரும்பும் மாணவியின் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட கலெக்டர், ‘ஆலப்பி புராஜக்ட்’ திட்டத்தின் மூலமாக அவருக்கு உதவி செய்ய முன்வந்தார்.

பிறகு ஒரு தனியார் கல்லூரி அந்த மாணவிக்கு இடம் கொடுத்தது. கல்லூரி கட்டணத்தை யார் கட்டுவது என்ற சூழ்நிலையில், கலெக்டர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வர் என்பதால், நடிகர் அல்லு அர்ஜூனுக்கு  இதுகுறித்து இமெயில் மூலமாக தகவல் ெதரிவித்தார். இதையறிந்த அல்லு அர்ஜூன், மாணவியின் 4 ஆண்டுகளுக்கான படிப்புச் செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக பதிலளித்தார். இத்தகவலை கலெக்டர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, அல்லு அர்ஜூனைப் பாராட்டியுள்ளார்.

Related Stories: