ஆர்.கண்ணன் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் ஹன்சிகா

சென்னை: மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடித்த ‘காசேதான் கடவுளடா’ என்ற தமிழ் ரீமேக் படத்தையும், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற மலையாள ரீமேக் படத்தையும் இயக்கி முடித்துள்ள ஆர்.கண்ணன், தற்போது ஹீரோயினை மையமாக வைத்து இயக்கும் புதுப்படத்தின் பூஜை கடந்த மாதம் சென்னையில் நடந்தது. இதில் முதல்முறையாக ஹன்சிகா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இது எமோஷனல் மற்றும் ஹாரர் கலந்த காமெடி திரில்லர் படமாக உருவாகிறது.

மசாலா பிக்ஸ் சார்பில் ஆர்.கண்ணன் தயாரிக்கிறார். எழுத்தாளர் மா.தொல்காப்பியன் எழுதிய கதைக்கு தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன், பாடலாசிரியர் செல்வராஜ் ஆகியோர் இணைந்து திரைக்கதை, வசனம் எழுதுகின்றனர். ஹன்சிகாவுடன் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிஜிதா, பவன் நடிக்கின்றனர். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். நேற்று இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடந்து வருகிறது. 3 மாதங்களில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: