×

நாடு படத்தில் கொல்லிமலை உண்மை சம்பவம்

சென்னை: ஆர்க் மீடியா சார்பில் சக்ரா, ராஜ் தயாரித்துள்ள ‘நாடு’ என்ற படத்தை, ‘எங்கேயும் எப்போதும்’  படத்தை எழுதி இயக்கி இருந்த சரவணன் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் தர்ஷன், மகிமா நம்பியார், சிங்கம்புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா ஆகியோர் நடித்திருக்கின்றனர். சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய, சி.சத்யா இசை அமைத்துள்ளார்.

படம் குறித்து சரவணன் கூறுகையில், ‘தற்போதைய படங்களில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் புத்திசாலிகளாகவும், அறிவுக்கூர்மை நிறைந்தவர்களாகவும்
காட்டப்படுகின்றனர். நாங்கள் அவற்றில் இருந்து விலகி, சில எளிய மனிதர்களைப் பற்றிய கதையாக உருவாக்கியுள்ளோம். இதில் மலைவாழ் மக்கள் பிரச்னைகளைப் பேசியுள்ளோம். கொல்லிமலையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு நான் கொல்லிமலை சென்றிருந்தபோது நேரில் பார்த்த உண்மை சம்பவம், என் மனதை கடுமையாகப் பாதித்தது.

அதை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளேன். ரிலீசுக்குப் பிறகு இந்தப் படத்தின் சப்ஜெக்ட் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும்’ என்றார்.
மகிமா நம்பியார் கூறும்போது, ‘இதுவரை என்னை மென்மையான கேரக்டரில் பார்த்த ரசிகர்கள், இதில் வலுவான டாக்டர் கேரக்டரில் நடித்துள்ள என்னைப் பார்த்து கண்டிப்பாக ஆச்சரியப்படுவார்கள்’ என்றார்.



Tags : Kolimala , Nadu Movie, Kollimalai, Truth, Incident
× RELATED கொல்லிமலையில் பரபரப்பு சம்பவம் அருவி...