மாலத்தீவு தீ விபத்தில் மற்றொரு இந்தியர் பலி

புதுடெல்லி: மாலத்தீவு தீ விபத்தில் மேலும் ஒரு இந்தியர் பலியாகி உள்ளார். இதன்மூலம், அங்கு பலியான  இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மாலத்தீவின் தலைநகர் மாலேயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 9ம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  இதில் 10 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 4 பேர் பெண்கள். 6 பேர் ஆண்கள். பலியான 4 பெண்களில் 3 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். ஒருவர் வங்கதேசத்தை சேர்ந்தவர்.

பலியான ஆண்களில் 5 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது. அதில், 4 பேர் இந்தியர்கள் எனவும், ஒருவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்றும் தெரிந்தது. மோசமான நிலையில் இருந்த ஒருவரின் உடலை அடையாளம் காண முடியாமல் இருந்தது. இந்நிலையில், இவரும் இந்தியாவை சேர்ந்தவர் என நேற்று அடையாளம் காணப்பட்டது. ஆனால், இறந்த நபர் குறித்த  விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதன்மூலம், இந்த தீ விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: