ஆந்திராவில் கார் மீது அமர்ந்து சென்ற பவன் கல்யாண் மீது வழக்கு

திருமலை: கார் மீது அமர்ந்து சென்ற விவகாரம் தொடர்பாக ஜனசேனா கட்சி தலைவரும், பிரபல நடிகருமான பவன்கல்யாண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆந்திர மாநிலம், இப்டம் கிராமத்தில் சாலை விரிவாக்கத்திற்காக குடியிருப்புகள் இடிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூறுவதற்காக கடந்த சில தினங்களுக்கு முன் ஜனசேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன்கல்யாண் சென்றார். அப்போது சினிமாவில் வருவதுபோல், காரின் மீது அமர்ந்தபடி சென்றார். அந்த காரை பின்தொடர்ந்து கான்வாய்போல் பல கார்கள் சென்றது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், போக்குவரத்து விதிகளை மீறியதாக பவன் கல்யாண் மீது நடவடிக்கை எடுக்கும்படி தெனாலி மாவட்டம் மாரிஸ்பேட்டையைச் சேர்ந்த சிவன் என்பவர், குண்டூர் மாவட்டம் தாடேபள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஐபிசி 336 மற்றும் ரெட்வித் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், பவன்கல்யாண் மற்றும் அவரது கார் டிரைவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Related Stories: