இந்திய எல்லையில் பாக். டிரோன் ஊடுருவல் 2 மடங்காக அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தாண்டு மட்டும் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவிய டிரோன்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் - இந்திய எல்லையில் பஞ்சாப், ஜம்மு எல்லைப் பகுதிக்குள் பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானங்களான டிரோன்களின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. அந்த டிரோன்களில் வெடிபொருட்களும், போதை பொருட்களும் இந்திய எல்லையில் இருக்கும் தீவிரவாத கும்பலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எப்) இயக்குநர் பங்கஜ் குமார் சிங் கூறுகையில்:

‘‘2022ம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தானில் இருந்து வரும் டிரோன்கள் மூலம் போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை அனுப்புவது கணிசமாக அதிகரித்துள்ளது. சுட்டு வீழ்த்தப்படும் டிரோன்களை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளோம். கடந்த 2020ம் ஆண்டில் இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் 79 டிரோன்களை பிஎஸ்எப் கண்டறிந்துள்ளது. 2021ம் ஆண்டில், இது 109 ஆக அதிகரித்துள்ளது; இந்தாண்டு மட்டும் 266 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் 215 டிரோன்கள் பஞ்சாப் எல்லையிலும், 22 டிரோன்கள் ஜம்மு எல்லையிலும் ஊடுருவின,’’என்றார்.

Related Stories: