குஜராத்தில் 15 நாளில் 25 பிரமாண்ட பேரணி: சோனியா, ராகுல், பிரியங்கா அதிரடி வியூகம்

அகமதாபாத்: குஜராத்தில் பாஜ.வுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க காங்கிரஸ் புது வியூகம் வகுத்துள்ளது. அதன்படி சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோர் உள்ளிட்ட தலைவர்கள் களத்தில் இறங்கி  பிரசாரம் செய்ய உள்ளனர். இம்மாநிலத்தில் 15 நாட்களில் 25 பிரமாண்ட பேரணிகளை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கட்சியின் முன்னாள் முதல்வர்கள் உட்பட பல முன்னணி தலைவர்கள் களத்தில் இறங்கி,  தீவிரமாக பிரசாரம் செய்ய உள்ளனர்.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில்:

வரும் 15 நாட்களில் பிரசாரம் தீவிரப்படுத்தப்படும். 125 தொகுதிகளில் தொகுதி வாரியாக தனித்தனியாக பேரணிகளும், 25 பிரமாண்ட பேரணிகளும் நடத்தப்படும்.   இவற்றில் சோனியா பங்கேற்பதும் பரிசீலனையில் உள்ளது. இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, இமாச்சல் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், குஜராத்  பிரசாரத்தில் அவர் பங்கேற்பார்,’ என தெரிவித்தார்.

Related Stories: