×

5 மணி நேரம் பெய்த கனமழை; பெரியகுளம் வராக நதியில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு வருவாய் துறையினர் எச்சரிக்கை

பெரியகுளம்: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் பெரியகுளம் வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் ெபாதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள மேற்குதொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு ெதாடங்கிய கனமழை, தொடர்ந்து 8 மணி வரை பெய்தது. இதனால் வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவை எட்டி, ஏற்கனவே உபரிநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், பெரியகுளம் பகுதியில் உள்ள கல்லாறு, கும்பக்கரை ஆறு, செலும்பாறு உள்ளிட்ட ஆறுகளில் வரும் நீர் பெரியகுளம் வராக நதி ஆற்றில் கலந்து செல்வதால் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் வராக நதி ஆற்றங்கரையோர பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வராக நதி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Periyakulam Varaha river , 5 hours of heavy rain; Flooding in Periyakulam Varaha river: Revenue department warns coastal residents
× RELATED தேனி பெரியகுளம் வராக நதியில்...