அமெரிக்க மாஜி அதிபர் டிரம்பின் மகளுக்கு திருமணம்: முன்னாள் மனைவியும் பங்கேற்பு

புளோரிடா: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் மகள்  டிஃப்பனி டிரம்புக்கு திருமணம் நடந்தது. இந்த விழாவில் டிரம்பின் முன்னாள் மனைவியும் கலந்து கொண்டார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் - இவானா டிரம்ப் தம்பதியின் மகள் டிஃப்பனி டிரம்ப் (29) என்பவருக்கும், பிரபல தொழிலதிபரின் மகனான மைக்கேல் பவுலோஸ் (25) என்பவருக்கும் ஃபுளோரிடாவின் பாம் பீச்சில் திருமணம் நடந்தது.

இந்த ஆடம்பரமான திருமண விழாவில் முன்னாள் அதிபர் டிரம்பின் முன்னாள் மனைவி மார்லா மேப்பிள்ஸ் உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர். டிஃப்பனியும், மைக்கேல் பவுலோஸும் கடந்த 2018ம் ஆண்டு கிரேக்க நாட்டின் மைகோனோஸ் கிளப்பில் சந்தித்துக் கொண்டனர். இவரும் சில ஆண்டுகள் டேட்டிங்கில் இருந்தனர். கடந்தாண்டு இந்த ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: