2024 மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளர் அகிலேஷ் யாதவ்?: பரூக் அப்துல்லா கருத்தால் பரபரப்பு

லக்னோ: எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் பட்டியலில் அகிலேஷ் யாதவ் பெயர் இடம் பெற்றிருப்பது தொடர்பாக பரூக் அப்துல்லா கூறிய கருத்துகள், ெடல்லியில் அரசியல் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா நேற்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோ வந்தார். சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘வரும் 2024 மக்களவை தேர்தலில், பாஜக மற்றும் காங்கிரசை தவிர, பெரிய கட்சி எது என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். அதற்காக 2024 வரை காத்திருக்க வேண்டும். இப்போது எதுவும் என்னால் சொல்ல முடியாது. பிரதமர் பதவிக்கான போட்டியில் அகிலேஷ் யாதவ் களமிறங்குவாரா? இல்லையா? என்பது  குறித்து இப்போது என்னால் கூறமுடியாது.

அகிலேஷ் யாதவ் பிரதமராகலாமா? வேண்டாமா? என்பது குறித்து  அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அதற்காக கொஞ்சம் காலம் காத்திருக்க வேண்டும்’ என்றார். எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் பட்டியலில்  திடீரென அகிலேஷ் யாதவ் பெயர் இடம் பெற்றிருப்பது ெடல்லியில் அரசியல் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: