2017ல் பாஜகவுக்கு ‘ஷாக்’ கொடுத்தது போல் குஜராத்தில் 15 நாளில் 25 மெகா பேரணி: சோனியா, ராகுல், பிரியங்கா பிரசாரம்

அகமதாபாத்: குஜராத்தில் 2017 சட்டமன்றத் தேர்தலின் போது ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தை  முன்னெடுத்ததால், அப்போது காங்கிரஸ் 99 இடங்களை கைப்பற்றியது. அதேபோல் தற்போது பாஜகவுக்கு ஷாக் கொடுக்க காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிந்த நிலையில், தற்போது குஜராத் சட்டப் பேரவை தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி ஆயத்தமாகி வருகிறது. வரும் டிசம்பர் 1, 5ம் தேதிகளில் இரண்டு கட்டமாக குஜராத்தில் தேர்தல் நடப்பதால், அடுத்த 15 நாட்களில் 125 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 25 மெகா பேரணிகளை நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

இந்த தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல்; காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கட்சியின் முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரங்களை மேற்கொள்ள உள்ளனர். கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலின் போது ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்தார். அதனால் காங்கிரஸ் கட்சி 99 இடங்களை கைப்பற்றியது.

இது, ஆளும் பாஜகவுக்கு பெரும் அடியை கொடுத்தது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களை கைப்பற்றியது, பாஜக தலைமைக்கு பெரும் ஷாக்கை கொடுத்தது. கடந்த பிப்ரவரி மாதம் துவாரகாவில் நடந்த மாநில அளவிலான கூட்டத்தில், தனது தேர்தல் பிரசாரத்தை ராகுல் காந்தி தொடங்கி வைத்தார். ஆனால் இந்த முறை மகாராஷ்டிராவில் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இமாச்சல் பிரதேச தேர்தல் பிரசாரத்தில் ராகுல்காந்தி பங்கேற்காத நிலையில், குஜராத் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Related Stories: