குன்னூர் வாக்குச்சாவடியில் திமுக மாவட்ட செயலாளர் ஆய்வு

ஊட்டி: வாக்குச்சாவடிகளில் நடைபெறும் சிறப்பு முகாமினை திமுக மாவட்ட செயலாளர் ஆய்வு செய்தார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் சார்பில் சிறப்பு முகாம் நேற்றும், இன்றும் நடக்கிறது. மேலும், வரும் 26 மற்றும் 27 ஆகிய இரு நாட்கள் நடக்கிறது. இந்த வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திமுக தலைமை அறிவித்திருந்தது. இதற்கு ஏற்றார் போல், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் திமுக சார்பில் நியமிக்கப்பட்டிருந்த முகவர்கள் கலந்து கொண்டனர்.

இவர்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு மக்களுக்கு உதவி செய்தனர். இந்நிலையில், குன்னூர் ஹேபீல்டு எஸ்டேட் பகுதியில் நடந்த சிறப்பு முகாமை திமுக மாவட்ட செயலாளர் முபாரக் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சதக்கதுல்லா உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: