எங்களுக்கு யார் தயவும் தேவையில்லை, ஓபிஎஸ் செல்லாத 1000 ரூபாய் நோட்டு அதிமுக எம்எல்ஏ பாய்ச்சல்

திருப்பரங்குன்றம்:  ஓபிஎஸ் ஒரு செல்லாத ஆயிரம் ரூபாய் ேநாட்டு என ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தெரிவித்தார். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா அளித்த பேட்டி: அதிமுகவை சேர்ந்த 2,532 பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி ஓபிஎஸ்ஐ கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளோம். எங்கள் சட்ட திட்டப்படி கட்சியிலிருந்து ஒருவர் விலக்கப்பட்டால் அவரிடம் யாரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு கொள்ளக்கூடாது. நீதிமன்ற அறிவிப்பிற்காக காத்திருக்கிறோம்.

அதிமுக வலிமையோடும், பொலிவோடும் உள்ளது. யாருடைய தயவும், துணையும் தேவையில்லை. இந்த இயக்கத்தில் நீக்கப்பட்டவரை நாங்கள் கண்ணீர் செல்வமாகத்தான் பார்க்கிறோம். ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்களை செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டாக பார்க்கிறோம். அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இனியும் இருக்காது. அதில் மிகத்தெளிவாக இருக்கிறோம் என்றார்.

Related Stories: