கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி விவசாயிகளுக்கு இழப்பீடு: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சீர்காழியில் பெய்த வரலாறு காணாத மழையால் மழைநீர் தேங்கி இருப்பதாலும், விவசாய நிலங்களும், இறால் பண்ணைகளும் மழைநீரில் மூழ்கியதாலும் விவசாயிகளும், இறால் பண்ணை தொழிலாளர்களும், பொதுமக்களும் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சம்பா நெற்பயிர்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கியுள்ளது. சீர்காழி அருகே திருநகரி பகுதியில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இறால் வளர்ப்பு பண்ணைகள் மழைநீரில் மூழ்கியுள்ளன.

இறால் வளர்க்கும் பண்ணையில் ஏற்பட்ட உடைப்பை தொழிலாளர்களே சரி செய்து வருகின்றனர். இறால் பண்ணை மழைநீரில் மூழ்கியதால் ஏற்பட்டுள்ள இழப்பீட்டுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், இறால் பண்ணை தொழிலாளர்கள், பொதுமக்கள் ஆகியோரின் கோரிக்கையை உடனடியாக தமிழக அரசு  நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: