பெருங்குடி கல்லுகுட்டை பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணி துணை மேயர் நேரில் ஆய்வு

துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பெருங்குடி கல்லுகுட்டை பகுதியில் அம்பேத்கர் புரட்சி நகர், ஜேஜே நகர், திருவள்ளுவர் நகர், அண்ணல் அம்பேத்கர் நகர், செம்பொன் நகர், அஞ்சுகம் அம்மையார் நகர், சந்தியா நகர்  உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில், மழைநீர் வடிகால் வசதிகள் இல்லாததால், தற்போது பெய்து வரும் கன மழையால் மேற்கண்ட பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். அதன்பேரில், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், 14வது மண்டல குழு தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அப்குதியில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், மழைநீர் வெளியேற உதவியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதனையடுத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் தற்காலிக கால்வாய் வெட்டப்பட்டு மழைநீர் விரைந்து வெளியேற நடவடிக்கை மேற்கொண்டனர்.

Related Stories: