புனித தோமையார் மலை ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்

ஆலந்தூர்: புனித தோமையார் மலை ஒன்றிய திமுக அவசர செயற்குழு கூட்டம், மூவரசன்பட்டு பகுதியில் நேற்று நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ஜி.கே.விவேகானந்தன் தலைமை வகித்தார். அவைத்தலைவர் சக்தி, ஒன்றிய துணை செயலாளர்கள் மஞ்சு ஜெயபாலன், செல்வராஜ், விநாயகமூர்த்தி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பி.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ஜி.கே.வி.பிரபாகரன் வரவேற்றார்.

கூட்டத்தில், திருநீர்மலை பகுதி செயலாளர் ஜெயக்குமார் கலந்துகொண்டு வாக்குச்சாவடி முகவர்களுக்கான பட்டியலை அந்தந்த கிராம பஞ்சாயத்து நிர்வாகிகளிடம் ஒப்படைத்ததார். பின்னர், அவர் பேசும்போது, சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி மன்ற தேர்தல் போன்றவற்றில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி முகவர்களை மீண்டும் நியமிக்க வேண்டும், என்றார். கூட்டத்தில், ஒன்றிய நிர்வாகிகள் மரி இளங்கோவன், புருஷோத்தமன், செல்வம், சதீஷ் உதயா, பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: