டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவு

டெல்லி: டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.4ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்து உருண்டு ஓடின. இதனால் சத்தம் கேட்டு அலறி அடித்து வீடுகளில் இருந்து வெளியேறினர். கதவுகள், ஜன்னல்கள் ஆடியது தொடர்பான வீடியோக்களை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். டெல்லி, நொய்டா, குருகிராம், பரிதாபாத்தில் 54 நொடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 1 நிமிடத்திற்கு நீடித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. மேலும் சில பகுதிகளில் மீட்பு பணிகளை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: