×

புரோ கபடி லீக்: ஜெய்ப்பூரை வீழ்த்தி பாட்னா 6வது வெற்றி

புனே: 12 அணிகள் பங்கேற்றுள்ள 9வது புரோ கபடி லீக் தொடர் போட்டிகள் தற்போது புனேவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 70வது லீக் போட்டியில் உபி.யோத்தா 40-34 என அரியானாவை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் யுமும்பா 34-33 என புனேரி பால்டனை வென்றது. 72வது போட்டியில் பாட்னா 37-30 என ஜெய்ப்பூரை வீழ்த்தி 6வது வெற்றியை ருசித்தது.

இன்று இரவு 7.30 மணிக்கு பெங்கால் வாரியர்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ், இரவு 8.30 மணிக்கு தெலுங்கு டைட்டன்ஸ்-உபி.யோத்தா, இரவு 9.30 மணிக்கு ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன.

Tags : Pro ,Kabaddi League ,Patna ,Jaipur , Pro Kabaddi League: Patna beat Jaipur for 6th win
× RELATED புரோ கபடி லீக் தொடர்: அரையிறுதியில் இன்று புனே – பாட்னா மோதல்