சுப்ரீம்கோர்ட் விடுதலை செய்த நிலையில் கடைசியாக பரோல் கையெழுத்துபோட காட்பாடி போலீஸ் ஸ்டேஷன் வந்த நளினி

வேலூர்: கடைசியாக பரோல் கையெழுத்து போட காட்பாடி போலீஸ் ஸ்டேஷனுக்கு மகிழ்ச்சி பொங்க வந்தார் ராஜிவ்காந்தி கொலை தண்டனை கைதி நளினி.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை தொடர்ந்து நளினி, முருகன் உட்பட மீதமுள்ள 6 பேரையும் சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் நகல் இன்னும் தொடர்புடைய சிறை நிர்வாகங்களுக்கு வந்து சேரவில்லை.

இந்நிலையில் 10வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டு காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் தங்கியுள்ள முருகன் மனைவி நளினி இன்று காலை 10 மணியளவில் காட்பாடி போலீஸ் ஸ்டேஷனுக்கு கடைசி முறையாக கையெழுத்திட வந்தார். அப்போது அவர் புளூ கலரில் சேலையும், அதற்கு மேட்சாக ரவிக்கையும் அணிந்து மகிழ்ச்சி பொங்க போலீசாரிடம் பேசியபடி வந்தார்.

Related Stories: