×

விராலிமலை முருகன் கோயில் திருத்தேர் செப்பனிடும் பணி துவக்கம்

விராலிமலை : விராலிமலை முருகன் கோயில் திருத்தேர் செப்பனிடும் பணி துவங்கியது. விராலிமலை முருகன் திருக்கோயில் சிறப்பு பெற்ற தலமாகும் நகரின் மத்தியில் அமைந்துள்ள விராலிமலை முருகன் மலைக் கோயிலுக்க உள்ளூர் பக்தர்கள் மட்டும் அல்லாது பல்வேறு வெளிமாநில, வெளிநாடு பக்தர்களும் இக்கோயில் வந்திருந்து வழிபாடு நடத்தி செல்வது வழக்கம்.

வள்ளி, தெய்வானை சமேதராக ஆறு முகங்களுடன் மலைமேல் அமர்ந்து காட்சி தரும் முருகன் விராலிமலையின் தனி சிறப்பாகும் இக்கோயில் வரும் பக்தர்கள் மலை மீது ஏறி செல்லும் வழியில் முருகனின் வாகனமான மயில்களை கூட்டம் கூட்டமாக காணலாம் தோகை விரித்தாடும் வண்ண மயில்களை காண கண் கோடி வேண்டும் என்பார்கள் இவ்வூர் வரும் பக்தர்கள். பல்வேறு சிறப்புகள் பெற்ற இத்தலத்தில் வருடம் தோறும் தைப்பூசம், வைகாசி விசாகம் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

சுமார் நிலைத் தேர் 18 அடியிலும் சுற்றி வரும் போது 33 அடியிலும் இருக்கும் இத்தேரை செப்பனிட ஊர் முக்கியஸ்தர்கள் முடிவு செய்ததை தொடர்ந்து வெள்ளிக்கிழமை தேர் செப்பனிடும் பணி தொடங்கியது சுமார் ரூ.7 லட்சம் செலவில் செப்பனிடும் இப்பணியின் தொடக்க விழாவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் உறுப்பினர் ஜனனி ராமச்சந்திரன் மற்றும் விழா கமிட்டியாளர் பூபாலன், அபூர்வா பாஸ்கர் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தனர். நேற்று தொடங்கிய இப்பணி வரும் இரண்டு மாதங்களில் நிறைவடைந்து தைப்பூச தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறும் என்று விழா கமிட்டியாளர்கள் தெரிவித்தனர்.

Tags : Viralimalai, Murugan Temple, Chariot, Mali koil
× RELATED யானை தாக்கி விவசாயி பலி