×

பெரம்பலூர் மாவட்டத்தில் கன மழை சிறுவாச்சூர் சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவு

பெரம்பலூர் : மழை காரணமாக சிறுவாச்சூர் ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்தது. சந்தைக்கு வந்த ஆடுகளை வண்டியைவிட்டு கீழே இறக்கமுடியாமல் வியாபாரிகள் தவித்தனர். பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை தோறும் ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.

பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து சராசரியாக 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆடுகள் சந்தைக்கு அழைத்து வரப்படும். பெரம்பலூர் மட்டுமன்றி அருகிலுள்ள சேலம், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் 200க்கும் மேற்பட்டோர் சிறுவாச்சூர் ஆட்டு சந்தைக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் சிறுவாச்சூர் ஆட்டுச்சந்தை நடைபெற்றது. இருந்தும் அதிகாலை 3 மணிமுதல் தொடர்ந்து மழைபெய்து வந்ததால் ஆடு வளர்க்கும் விவசாயிகள் வரத்துக் குறைவாக இருந்தது. அதனால் ஆடுகளின் எண்ணிக்கை 500க்கும் குறைவாகவே காணப்பட்டன.

வாகனங்களில் அழைத்து வரப்பட்ட ஆடுகளில் பெரும்பாலானவை மழையின் காரணமாக வண்டியை விட்டு கீழே இறங்கவைக்க முடியாமல் வியாபாரிகள் தவித்தனர். வெளி மாவட்ட வியாபாரிகள் வருகை தந்தும் குறைவான ஆடுகளையே மறை முகமாக ஏலமெடுத்தனர்.இதனால் சாதாரணமாக வார சந்தைகளில் ரூ.50 லட்சத்திற்குமேல் விற்பனையாகும் ஆடுகள், நேற்று ரூ.5 லட்சத்திற்கு குறைவாகவே விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

Tags : Perambalur district ,Churuvachur market , Perambalur, Siruvachur, Goat market,
× RELATED பெரம்பலூர் மாவட்ட தாலுகாக்களில்...